திருமணம் வரை சென்ற உறவு; உடம்பு பாதிப்பு வேற... மனம் திறந்த நடிகை கௌசல்யா!
தான் கடந்து வந்த பயணம் குறித்து நடிகை கௌசல்யா மனம் திறந்துள்ளார்.
நடிகை கௌசல்யா
90ஸ்களில் தமிழ் சினிமாவில் கியூட்டான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஏறத்தாழ 30 படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “தனக்கும் ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு தொடர்பு இருக்கிறது என அப்போது கிசு கிசு எழுந்ததது. ஆனால், இது உண்மையல்ல. திருமணம் என்பது மிகவும் அழகான விஷயம்.
உடல் பருமன்
தனக்கு ஒருவருடன் திருமணம் வரை ஒரு உறவு சென்றது. ஆனால், அந்த உறவு முறிந்து போனதால் மனதளவில் அதிலிருந்து வெளிவர தனக்கு நேரம் எடுத்துக்கொண்டது. அது மட்டுமன்றி உடலில் சில ஆரோக்கிய குறைபாடுகள் இருந்ததால் சில ஆண்டுகள் உடல் பருமனுடன் காணப்பட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். நட்பே துணை, 4 லெட்டர்ஸ், ராங் டீ, உத்ரா, ஹீரோ, ராதா கிருஷ்ணா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil