ஒரு நாள் இரவில் அந்த பிரச்சனை; அப்போது விஜயகாந்த்...நடிகை கௌசல்யா ஓபன் டாக்!
நடிகை கௌசல்யா விஜயகாந்த் தனக்கு உதவியது குறித்து பேசியுள்ளார்.
நடிகை கௌசல்யா
90ஸ் களில் தமிழ் சினிமாவில் தனது கியூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌசல்யா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஏறத்தாழ 30 படங்களில் நடித்துள்ளார். 1996ம் ஆண்டு வெளியான 'ஏப்ரல் ' என்ற மலையாள படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். பூவேலி என்ற திரைபடத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். விஜய், சூர்யா, பிரபுதேவா, கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
அண்மையில் கௌசல்யா பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் 'தான் நடிகர் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட இக்கட்டான பிரச்சனையில் விஜயகாந்த் தனக்கு எவ்வாறு உதவி செய்தார் என்பது பற்றி கௌசல்யா பேசியிருக்கிறார்.
பேட்டி
கௌசல்யா பேசியதாவது "விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா? அவர் நடித்த வானத்தைப்போல திரைப்படத்தில் நான் அவருடன் இணைந்து நடிக்கும் போது எங்களை எல்லாம் அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார்.
ஒருமுறை நான் இரவு காரில் வந்து கொண்டிருக்கும்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ரோட்டில் என்னுடைய கார் பஞ்சராகி நின்று விட்டது. டிரைவர் கூட டயர் மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டார். அப்போது அந்தப் பக்கமாக காரில் வந்த விஜயகாந்த் உடனே என்ன நடந்தது? என்று என்னிடம் கேட்டார்.
நான் சொன்னதும் அவரே காரில் இருந்த ஸ்டெப்னி டயரை எடுத்து பஞ்சரான டயரை மாற்றி என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இந்த மாதிரி குணம் யாருக்கும் வராது.
அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் போதும், அவர் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை. விஜயகாந்த் எப்போதுமே யாராலும் குறை சொல்ல முடியாத நபர்' என்று நடிகை கௌசல்யா பேசியுள்ளார்.