எல்லை மீறிய நடிகை கஸ்தூரியின் பேச்சு - தேடிப்போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி 2 நாட்களாக எந்தப் பதிவும் வெளியிடவில்லை.
நடிகை கஸ்தூரி
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து எல்லை மீறி சரமாரியான கருத்துகளை முன்வைத்தார்.
இவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதற்கிடையே , அடுத்த நாளே, செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். எனினும் மதுரை திருநகர், ஆண்டிபட்டி போன்ற பகுதிகளிலும் கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் அகில இந்தியத் தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் கலவரத்தைத் தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவு?
இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கச் சென்றபோது அவரது வீடு பூட்டியிருந்தது.இதனைத் தொடர்ந்து செல்போனில் அழைக்கப்பட்ட போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி 2 நாட்களாக எந்தப் பதிவும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் தனிப்படை காவல்துறை கஸ்தூரியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்