லேடி சூப்பர் ஸ்டார்னா இவங்கதான் - நயன்தாராவை ஓரம் கட்டிய பிரபல நடிகை!
லேடி சூப்பர் ஸ்டார் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கஸ்தூரி
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. தற்போது, பல கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து, பல பிரபலங்கள் பற்றி கருத்து தெரிவித்து வருவது வழக்கம்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகைகளை பொருத்தவரைக்கும் இந்த நடிகைக்காக மட்டுமே படத்தை பார்க்கலாம் என்று யார் ஒருவரை மையப்படுத்தி படம் அமைகிறதோ அப்படி இருந்தால்தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்ல முடியும்.
லேடி சூப்பர் ஸ்டார்
அந்த வகையில் பார்க்கும்போது இந்த காலத்தில் அப்படிப்பட்ட ஒரு நடிகை இல்லை. ஆனால் ஆரம்ப காலத்தில் கேபி சுந்தராம்பாள் அந்த மாதிரியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். அவர் நடித்த பல படங்களில் அவரை சுற்றி கதைகள் அமைந்திருக்கும்.

அவருக்காகவே கூட்டம் கூட்டமாக பார்க்க போன ரசிகர்கள் ஏராளம். அவரை தொடர்ந்து விஜயசாந்தியை சொல்ல முடியும். இவர்கள் இரண்டு பேரையும் அடுத்து மற்ற எந்த நடிகையும் அப்படி சொல்ல முடியாது.
நயன்தாராவை பொருத்தவரைக்கும் அவர் நடித்த மாயா என்ற திரைப்படம் மட்டுமே அந்த மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த கதையாக அமைந்திருந்தது. மத்தபடி எந்த படமும் சரியாக போகவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil