லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்போதும்... - டிடி நெகிழ்ச்சி பதிவு...!
பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி நயன்தாராவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்.
தமிழ் சினிமாத்துறையில் சலசலப்பு
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவம், தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

டிடி நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி நயன்தாராவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்போதும், மகிழ்ச்சியான ஒளிரும் மற்றும் உள்ளடக்கம் கொண்டவர். நேர்காணலில் அவரது 20 ஆண்டுகால வேலை பற்றி இந்த நேர்காணலில் மனம் திறந்து பேசினார். விரைவில் விவரங்களை பகிர்ந்து கொள்வேன் என்று பதிவிட்டுள்ளார்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil