இந்த முட்டாள்களுக்கு கடுமையான விதிகள் கொண்டு வர வேண்டும் - நடிகை கங்கனா ட்வீட்!
சில பெண்கள் கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை பதிவித்திருந்தனர் அதனை நடிகை கங்கனா கடுமையாக கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.
நடிகை
பாலிவுட்டில் பிரபல நடிகையான கங்கனா ரனாவத் சில காலமாக அவரது ட்விட்டர் பக்கத்தில் சில விஷயங்களை ட்வீட் செய்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார்.
இதனால் இதற்கு முன்னர் இருந்த ட்விட்டர் நிறுவனம் இவரது கணக்கை முடக்கி நடவடிக்கை எடுத்து வந்தது.
தற்பொழுது பிரபல தொழில் அதிபர் எலன் மஸ்க் அதனை வாங்கியதும் காசு கொடுத்தால் கணக்கை திரும்ப பெற முடியும் என்று வந்தது.
அதனால் இவரது கணக்கை திரும்ப பெற்று தொடர்ந்து சர்ச்சையான ட்வீட்களை செய்து வருகிறார்.
கண்டனம்
இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் நிகி உனியால் என்பவர் அவர்கள் கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்கள்.
அதில் பெண்கள் பாதி ஆடையில், டிரௌசர் போன்ற ஆடைகளை அணிந்து சென்றிருந்தனர்.
இதனை நடிகை கங்கனா கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார். அதில் அவர், தான் ஒருமுறை ஷார்ட்ஸ் உடன் வாட்டிகன் கிறிஸ்தவ கோவிலுக்குள் சென்றபோது அவர்கள் அனுமதிக்கவில்லை.
These are western clothes, invented and promoted by white people, I was once at the Vatican wearing shorts and t shirt, I wasn’t even allowed in the premises, I had to go back to my hotel and change…. These clowns who wear night dresses like they are casuals are nothing but lazy… https://t.co/EtPssi3ZZj
— Kangana Ranaut (@KanganaTeam) May 26, 2023
அதனால் ஹோட்டல் ரூமிற்கு சென்று மாற்றிவிட்டு வந்ததாக கூறியுள்ளார். மேலும், இங்கு கோவிலுக்குள் அரைகுறையான மேற்கத்திய ஆடைகளை அணிந்து வந்துள்ளனர்.
இந்த முட்டாள்களுக்கு அந்த கோவில் நிறுவனம் கடுமையான விதிமுறைகளை கொண்டு வரவேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.