பிரபல தெலுங்கு சூப்பர்ஸ்டார் ராம் சரணின் மனைவி பதிவிட்ட ட்வீட் ; வலுக்கும் கண்டனம்

viral tollywood telugu tweet ram charan backlash upasana konidela
By Swetha Subash Jan 29, 2022 01:14 PM GMT
Report

நடிகர் ராம்சரண் மனைவி உபசனா பதிவிட்ட ட்வீட் சமூக வலைதள பக்கங்களில் பயங்கர விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

தெலுங்கு சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண்.

இவர் கடந்த 2011-ம் ஆண்டு உபசனா கோனிடேலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராம் சரணின் மனைவி உபசனா எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர்.

இவர் தன் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களையும், சமூகம் குறித்த கருத்துகளையும் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று வாழ்த்து சொல்ல உபசனா ட்விட்டரில் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். தற்போது அந்த ட்வீட் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது ராம்சரண் மனைவி உபசனா தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்று பதிவிட்டிருந்தார்.

கன்னியாகுமரி சுசீந்திரம் கோவில் கோபுரத்தில் பலரும் அமர்ந்திருப்பது போல போட்டோஷாப் செய்யப்பட்ட அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள்

அந்த போட்டோவில் பலர் ஷூ, செருப்புடன் இருப்பது பற்றி குறிப்பிட்டு உபசனாவை மோசமாக திட்டி இருக்கின்றனர்.

மேலும், இது இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.இப்படி உபசனா போட்ட ட்வீட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், ஒரே ஒரு போட்டோ போட்டதற்கு ராம்சரன் மனைவியை நெட்டிசன்கள் பயங்கரமாக வறுத்தெடுத்து வருகின்றனர். இதற்கு ராம்சரன் மற்றும் உபசனா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.