நடிகை கனகாவின் தனிமைக்கு அவரின் காதல் தான் காரணம் - அதிர்ச்சி பின்னணி

Kanaka Tamil Cinema
By Sumathi May 10, 2023 06:45 AM GMT
Report

நடிகை கனகா தனிமை குறித்த தகவல்களை திரைப்பட விமர்சகர் செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார்.

நடிகை கனகா

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் நடிகை கனகா. ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் தன் வீட்டில் வசித்து வருகிறார். சுமார் 30 வருடங்களாகவே வெளியுலகில் இருந்து காணாமல் போய்விட்டார்.

நடிகை கனகாவின் தனிமைக்கு அவரின் காதல் தான் காரணம் - அதிர்ச்சி பின்னணி | Actress Kanaka Has Shared The Reason For Alone

சொத்து விஷயத்தில் அவருடைய அப்பாவோடு ஏற்பட்ட பிரச்சனை, கை கூடாத காதல், கைவிட்ட கணவர் என பல பிரச்சனைகள் அவருக்கு வந்ததால் பல வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமை வாழ்க்கை நடத்தி வருகிறார்.

அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், அம்மா தேவிகாவால் சினிமா வாய்ப்பைப் பெற்ற நடிகர் ஒருவரின் மகனான ராமச்சந்திரன் என்பவர் கனகாவுக்கு பிஏவாக இருந்தார். அப்போது கனகாவிற்கு படபிடிப்பு செல்வதற்கும் கதை கேட்பது சம்பளம் வாங்குவது என அனைத்திலும் துணையாக இருந்து அவரை மன அழுத்தத்தில் இருந்து மீட்டு வந்தார்.

நடிகை கனகாவின் தனிமைக்கு அவரின் காதல் தான் காரணம் - அதிர்ச்சி பின்னணி | Actress Kanaka Has Shared The Reason For Alone

ராமச்சந்திரனுக்கு கனகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் ராமச்சந்திரனை தவறாக புரிந்து கொண்ட கனகா அவரை போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டார்.

பிறகு சில வருடங்கள் கழித்து ராமச்சந்திரன் இறந்த பிறகு தான் கனகாவுக்கு அவர் தன்னை காதலித்ததே தெரிந்தது. இதனால் மீண்டும் மனம் உடைந்து போன கனகா சினிமாவும் வேண்டாம், எதுவும் வேண்டாம் என்று தன்னைத்தானே வீட்டில் சிறை வைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார் என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.