நான் ரொம்ப பழசாகிட்டேன்- கனகாவின் எமோஷ்னல் வீடியோ: காரணம் என்ன?

KARAGATTAKARAN Actress Kanaka Emotional Video
By Irumporai Sep 04, 2021 12:50 PM GMT
Report

இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும்

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே... சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே.

 கராகாட்டக்காரனின் வெளியான இந்த பாடலை கேட்கும் போது நடிகை கனகா நம் கண் முன்னே வந்து போவார்.

கரகாட்டாக்காரன் திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை கனகா அதன்பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார். ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, முரளி, கார்த்திக்,ராமராஜன் எனப் பல நடிகர்களுடனும் ஜோடி போட்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என்றும் அவர் ஹிட்டடித்தார்.

மலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி, சுரேஷ் கோபி படங்களில் நடித்தார். கடையிசாக வி.சேகர் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் தான் கனகா நடித்தார்.

அதன் பின்னர் கனகா எங்கு சென்றார் என்ன ஆனார் என சரியான தகவல் வரவில்லை வாழ்ந்தால் போற்றும், வீழ்ந்தால் மறக்கும் இது திரை சமூகத்திற்கும் பொருந்தும் இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றை கனகா வெளியிட்டுள்ளார்

[

,அந்த வீடியோவில் கனகா, எனக்கு இப்போது 50 வயசாயிடுச்சு. நான் ரொம்ப பழசாகிட்டேன். என் நடிப்பு, நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் அப்டேட் செய்ய வேண்டும். ஆனால் அதை நான் சீக்கிரம் கற்றுக்கொள்வேன். எனக்கு ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி கத்துக்கிட்டு ரீஎன்ட்ரி கொடுக்கணும் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

கனகா மட்டும் தன்னை அப்டேட் செய்து அப்கிரேட் ஆனால் தமிழ்த் திரையுலகுக்கு மீண்டும் வலம் வருவார் அதற்கு உதாரணமாக கனகா வீடியோவின் கீழ் உள்ள கமென்டுகளும் அவரை மக்கள் வரவேற்பதற்கான சாட்சியாக உள்ளன.