படுக்கைக்கு வந்தா தான் பேமண்ட் - பிரபல இயக்குனரை வெளுத்து வாங்கிய காஜல்!
காஜல் பசுபதி பிரபல இயக்குனர் பற்றி பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
காஜல் பசுபதி
தமிழ் தொலைக்காட்சியில் வி.ஜே.வாக அறிமுகமாகி, சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை காஜல் பசுபதி. ரபல நடன மாஸ்டர் சாண்டியை திருமண செய்தார். அதன்பின், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
காஜல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து, தனக்கு பிடிக்காதவர்கள் பற்றியும், ஜாலியான பதிவுகளையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
எச்சரிக்கை
இந்நிலையில், அதன் வரிசையில் சமீபத்தில் தான் நடித்ததற்கு சம்பளத்தை கேட்ட போது இப்போது பணம் இல்லை வெயிட் பண்ணு என்று சொன்ன இயக்குனர் தற்போது நான் சூட்டிங்கில் குடித்துவிட்டு ரகளை செய்வதாக என் பெயரை கெடுக்கிறார்.
அத்தோடு வேலை செய்யும் போது நான் குடித்ததாக சரித்திரமே இல்லை. ஆனாலும் என்னைப் பற்றி தவறாக பேசும்போது இதற்கு," படுத்தால் தான் பேமென்ட் கொடுப்பேன்னு சொல்வதாக நான் சொல்ல ரொம்ப நேரம் ஆகாது" என்று அந்த இயக்குனரை எச்சரித்துள்ளார்.
ஆனால், அந்த இயக்குனர் யார் என்பது பற்றி அவர் குறிப்பிடாதது குறிப்பிடத்தக்கது.

தொப்பை முதல் மலச்சிக்கல் வரை தீர்வு கொடுக்கும் கடுக்காய் பொடி... எப்படி சாப்பிடனும்னு தெரியுமா? Manithan
