சான்ஸ் கேட்டதும்... நண்பனே அப்படி பேசினான் - பிரபல நடிகை வேதனை!
சான்ஸ் கேட்டதும் நண்பனே அந்த மாதிரி பேச ஆரம்பித்துவிட்டான் என நடிகை காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.
காஜல் பசுபதி
சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்தவர் நடிகை காஜல் பசுபதி. இவர் சன் மியூஸிக், கலைஞர் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சி சேனல்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கடைசியாக கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்தார்.
அதன் பிறகு, மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதன் கோரியோகிராஃபரான சாண்டியை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துக்கொண்டனர்.
வேதனை
இந்நிலையில், இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது நெருங்கிய தோழியின் காதலருக்கு ஒரு தொலைக்காட்சி சேனலின் தலைமை பொறுப்பில் இருப்பவருடன் நல்ல நட்பு உள்ளதால் அவரிடம் சீரியலில் நடிக்க ஏதாவது சான்ஸ் கிடைக்குமா என கேட்டு சொல்லுமாறு உதவி கேட்டேன்.
அதுவரை மரியாதையாக பேசிய அவர் சான்ஸ் கேட்டப் பிறகு நள்ளிரவில் போன் செய்து, தனக்கு இப்படி ஒரு பெண் வேண்டும் என சில அடையாளங்களை கூறி மோசமாக பேசியுள்ளார்.
அந்த சம்பவத்துக்கு பிறகு யாரிடமும் வாய்ப்பு கேட்க விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளார்.