திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் - நடிகை ஜோதிகா ஆவேசம்

Suriya Jyothika Tamil Cinema Kanguva
By Karthikraja Nov 17, 2024 08:03 AM GMT
Report

கங்குவா படத்திற்கு வரும் எதிர்மறை விமர்சனங்கள் ஆச்சர்யமளிக்கிறது என ஜோதிகா தெரிவித்துள்ளார்.

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, தீஷா பதானி நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த 14.11.2024 அன்று திரைக்கு வந்தது.

kanguva

இதுவரை சூர்யா நடிப்பில் அதிக செலவில் உருவான படம் கங்குவா என்பதால் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது. 

சண்டை போட்ட பத்திரிக்கையாளர்; மன்னிப்பு கேட்ட சூர்யா - நடந்தது என்ன?

சண்டை போட்ட பத்திரிக்கையாளர்; மன்னிப்பு கேட்ட சூர்யா - நடந்தது என்ன?

ஜோதிகா

இந்நிலையில் நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கங்குவா படம் குறித்த கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தக் பதிவை நான் நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்லாமல் ஜோதிகாவாகவும், சினிமா ரசிகையாகவும் எழுதுகிறேன். 

jyothika

கங்குவா படம் திரையுலகில் ஓர் அதிசயம். சூர்யா, உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஒரு நடிகராக சினிமாவை முன்னோக்கிக் கொண்டு செல்ல நீங்கள் காணும் கனவுகளும், முயற்சிகளும் என்னை பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.

எதிர்மறை விமர்சனங்கள்

நிச்சயமாக கங்குவா படத்தின் முதல் அரை மணி நேரம் சரியாக இல்லை. இரைச்சலாக இருக்கிறது. இந்தியா திரைப்படங்களில் பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, புதிய முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்ட இப்படத்தில் இத்தகைய பிழைகள் இயல்பானது தான். மேலும், அது முழு மூன்று மணிநேரத்தில் இருந்து முதலில் அரை மணி நேரத்தை மட்டும் குறிக்கின்றது.

ஆனால், உண்மையில், இது ஓர் அசல் திரையுலக அனுபவம். கேமரா பணியும் செயல்பாடும் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்ததில்லை. ஒளிப்பதிவாளர் வெற்றிக்கு பாராட்டுகள். நான் ஊடகங்களும்., சமூக ஊடங்களில் சில தரப்பினரும் வெளியிட்டிருக்கும் எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்து மிகவும் ஆச்சரியமானேன். ஏனெனில், அவர்கள் இதே மாதிரி பெரிய பட்ஜெட் திரைப்படங்களை முந்தைய காலங்களில் இந்த அளவுக்கு எப்போதும் விமர்சனம் செய்ததில்லை.

3D உருவாக்க முயற்சி

அவற்றில் பெரும்பாலும் பழமையான கதை மற்றும் பெண்களை இழிவுபடுத்துதல், இரட்டை அர்த்த உரைகள் பேசுதல் மற்றும் மிக மிக அதிகப்படியான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன.ஆனால், கங்குவா படத்தின் நேர்மையான சாதனைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. இரண்டாம் பாதியில் பெண்களுக்கான ஆக்‌ஷன் காட்சி மற்றும் கங்குவா எதிர்கொண்ட வஞ்சனை பற்றி யாரும் விமர்சிக்கவில்லை. கங்குவாவுக்கும் சிறுவனுக்கும் இடையிலான அன்பை கண்டுகொள்ளவில்லை. 

அவர்கள் விமர்சனம் செய்யும்போது, நல்ல பாகங்களை மறந்து விட்டார்கள் என நான் நினைக்கிறேன். கங்குவா மீது முதல் நாளில் எதிர்மறை கருத்துகளைத் தேர்ந்தெடுத்தது வருத்தமளிக்கிறது. முதல் காட்சி முடியும் முன்பே விமர்சனங்கள் வெளியாகின. கங்குவா குழுவின் 3D உருவாக்க முயற்சிகளும் பாராட்டுக்குத் தகுதியானதே. ‘‘கங்குவா’ குழுவே, பெருமைப்படுங்கள். ஏனெனில் எதிர்மறை கருத்துகளை கூறுவோர், அதை மட்டுமே செய்து, சினிமாவை முன்னேற்றுவதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.