நடிச்சா 10 ஆயிரம்; அட்ஜெஸ்ட்மெண்ட்னா 40 ஆயிரம் - நடிகர் கார்த்தியின் அக்கா ஓபன்டாக்!
கடைக்குட்டி சிங்கம் பட நடிகை தனக்கு நேர்ந்த அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுமை குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகை ஜீவிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜீவிதா. சினிமாவிலும் கடைக்குட்டி சிங்கம் உள்பட சில படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்திருக்கிறார்.
மிகவும் துணிச்சலான இவர் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவார். இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது ஒரு நாளைக்கு 40,000 என சம்பளம் பேசப்பட்டது.
அட்ஜெஸ்ட்மெண்ட்
ஆனால் அதற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். தயவு செய்து என்னால் அதெல்லாம் முடியாது என்று சொன்னவுடன் ஒரு நாளைக்கு நடிப்பதற்கு மட்டும் சம்பளம் 10,000 என்று கூறினார்கள்.
அது தனக்கு போதும் என அந்த படத்தில் நடித்ததாக தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
