10 நிமிஷ அட்ஜெஸ்ட்மெண்ட்; லேடி சூப்பர் ஸ்டார் மகளாக நடிக்க வாய்ப்பு - இளம் நடிகை பகீர்
நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்து சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இளம் நடிகை தெரிவித்துள்ளார்.
மாளவிகா ஸ்ரீநாத்
மலையலா சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் மாளவிகா ஸ்ரீநாத்(23). இவர் மதுரம், சாட்டர் டே நைட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,

சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மோசமான சம்பவம் நடந்தது. ஒருமுறை நடிகை மஞ்சு வாரியருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்காக நான் ஆடிஷனுக்கு சென்றேன். அப்போது அங்கு ஒருவர் என்னுடைய மார்பகத்தின் மீது கைவைத்தார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
மேலும் அவர் 10 நிமிடம் என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு என்று சொன்னார். நான் அந்த நேரத்தில் கேமராவை தட்டி விட்டு அந்த இடத்தில் இருந்து வந்துவிட்டேன்.

இந்த சம்பவத்தின் போது வெளியே அம்மா, தங்கை எல்லாரும் இருந்தார்கள். இப்போ நினைச்சாலும் அது பயங்கரமான அனுபவமாக இருக்கிறது என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil