2 திருமணம்; பாடகர் மீது க்ரஷ்.. ஆனால் அவரு gay - சீக்ரெட் உடைத்த நடிகை ஜெயசுதா!
காதல் நினைவுகள் குறித்து நடிகை ஜெயசுதா மனம் திறந்துள்ளார்.
நடிகை ஜெயசுதா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் போன்ற பிறமொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
கடைசியாக, விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார். இவர் அரசியலிலும் ஆர்வம் கொண்டவர். செகன்ட் ரபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2011ல் தெலுங்கு தேசம் கட்சிக்கு மாறினார். 2019ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்தார்.
இதற்கிடையில், இரண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் ஹீரோயினியாக நடித்த ஆரம்ப காலத்தில் தெலுங்கு நடிகர்கள் மீது சிறிய ஈர்ப்பு இருந்தது. ஆனால், அது காதலா? ஈர்ப்பா? என்று எனக்கு தெரியவில்லை.
காதல் நினைவுகள்
அதோட அது நீண்ட காலமும் நீடிக்கவில்லை. ஆனால், எனக்கு ஒரு கிரிக்கெட் வீரர் மீது தான் கிரஷ் இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீது எனக்கு ரொம்பவே ஆர்வம் இருந்தது. அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
பல நாட்கள் நான் கனவு கண்டேன். ஆனால், அவர் மீது இருந்த ஈர்ப்பு திருமணம் வரை செல்லாது என்று புரிந்து கொண்டேன். அதே போல் நான் ஒரு பாடகரை காதலித்தேன். இம்ரான் கான் போல அவரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கனவு கண்டேன்.
சில வருடங்களில் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்து கொண்டேன். அதற்குப் பிறகு இனி எதுவுமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.