64 வயதில் ரகசியமா 3-வது திருமணம் செய்த பிரபல நடிகை? - வெளியான தகவல்

Tamil Cinema Marriage
By Nandhini Jan 15, 2023 09:12 AM GMT
Report

64 வயதில் ரகசியமா பிரபல நடிகை ஜெயசுதா 3-வது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிமுகம் 

தெலுங்கு சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருவர் ஜெயசுதா. இவர் 1973-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனையடுத்து, 'சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள், பட்டிக்காட்டு ராஜா, இரு நிலவுகள், ராசலீலா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நிதின் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நிதின் கபூர் 2017-ம் ஆண்டு மும்பையில் அடுக்குமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தையடுத்து சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த ஜெயசுதா, தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.

actress-jayasudha-3rd-marriage

திருமணம் 

திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் 'வாரிசு' படத்தில் விஜய்யின் தாயாக நடித்துள்ளார் ஜெயசுதா. 64 வயதாகும் ஜெயசுதா, தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த ‘வாரிசு’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருடன் ஒன்றாக வந்து கலந்துகொண்டார். இவர்தான் ஜெயசுதாவின் 3வது கணவர் என்று சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஆனால், இந்த வதந்திகளை முற்றிலும் நடிகை ஜெயசுதா மறுத்துள்ளார். பிலிப் ரூல்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்றும், அவர் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை உருவாக்கி வருவதாகவும், திரைப்படத் துறையில் என்னுடைய பங்கைப் பற்றி அவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்காக தன்னுடன் அழைத்து வந்ததாகவும், அவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.