ஆபாச தளத்தில் என் முகம்.. சின்ன வயது புகைப்படம், இப்படியெல்லாம் பண்றாங்க - மார்பிங்கால் மனமுடைந்த நடிகை!
நடிகை ஜான்வி தனது புகைப்படத்தை வைத்து மார்பிங் செய்தது குறித்து பேசியுள்ளார்.
ஜான்வி கபூர்
திரையுலகில் டாப்பில் இருந்த நடிகை ஸ்ரீதேவி இவரது கணவர் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். இவர் சினிமாவில் தடக் என்ற படம் மூலம் தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். இவர் கோலாமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கான குட் லக் ஜெர்ரி படத்திலும், மலையாள படமான ஹெலன் படத்தின் ரீமேக்கிலும் நடித்துள்ளார்.
இவர் என்.டி.ஆரின் 30 வது படமான தேவரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை வருத்தம்
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதில், "சமீப காலமாகவே AI தொழில்நுட்பம் என்பது சர்வசாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதனால் நான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். நான் பள்ளி பருவத்தில் நான்காம் வகுப்பு நான் போது யாஹூ வலைதளத்தில் நானும் நடிகையாக மாற இருப்பதாக செய்தி வந்ததை கண்டு அதிர்ந்து போனேன்.
எப்போதே நான் என்னுடைய அம்மா, அப்பா உடன் வெளியில் சென்ற போது எடுத்த புகைப்படத்தை சோசியல் புகைப்படத்தை பதிவிட்டு இந்த மாதிரி செய்திகள் வெளியானது. அதோடு அனைத்து ஆபாச இணையதளங்களிலும் என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் என்னுடைய திரை வாழ்க்கைக்கு நிறைய பிரச்சினையாக இருக்கிறது.
சின்ன வயதிலேயே என்னுடைய அம்மா அப்பா உடன் எடுத்த சில புகைப்படங்கள் இன்று ஆபாச இணையதளங்களில் மார்பிங் செய்யப்பட்டு பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக நான் போலீசில் புகார் அளித்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.