பலமுறை தப்பா கேட்டாங்க.. நான் என்ன செய்வது? அதனால் தான் இப்படி பண்ணேன் - சீக்ரெட் சொன்ன நடிகை!

Bollywood Actress
By Vinothini Sep 30, 2023 05:30 PM GMT
Report

நடிகை படத்தில் அவர் நடித்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஈஷா குப்தா

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஈஷா குப்தா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜன்னத் 2 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

actress-esha-gupta-opens-about-adjustment

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

பேட்டி

இந்நிலையில், அவர், "சில இயக்குநர்கள் என்னிடம் ஒருமுறை அல்ல இரண்டு முறை அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். ஆனால் நான் மறுத்ததால் படப்பிடிப்பிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டேன். என்னைப் பற்றி பொய்யான கதைகள் பரப்பப்பட்டது. இதனால் என்னால் படங்கள் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இரண்டு பேர் இந்த எதிர்பார்ப்புடன் என்னிடம் வந்தார்கள். படம் பாதி முடிந்துவிட்டது.

actress-esha-gupta-opens-about-adjustment

நான் மறுத்ததால் அந்தப் படம் தொடர்பாக என்னைப் பார்க்க வேண்டாம் என சொன்னார்கள். செட்டில் நான் என்ன செய்ய வேண்டும்? இதற்குப் பிறகு, சிலர் என்னை நடிக்க வைக்கவே தயாராக இல்லை. என்னை பற்றி நிறைய சொன்னார்கள். எதற்கும் தயாராக இல்லை என்றால் என்னைப் படத்தில் எடுத்து என்ன பயன் என்று மற்றவர்களிடம் சொன்னார்கள்.

வெளியூர் படப்பிடிப்பின் போது நான் அவர்களின் வலையில் விழுந்துவிடுவேன் என்று நினைத்தனர். ஆனால் நானும் அறிவாளி தான். நான் தனியாக தூங்க மாட்டேன் என்றேன். என்னுடைய மேக்கப் கலைஞரையும் என் அறையில் வைத்து கொண்டேன்