அப்படி செய்து தான் நடிக்க வந்தேன்.. அந்த விஷயத்தினால் நிறைய வாய்ப்பு வந்துச்சு - நடிகை வெளிப்படை!
நடிகை தனது படத்தில் நடித்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஜானகி தேவி
தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சீனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜானகி தேவி. இவர் ஆடுகளம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் மதுரையை மையமாக வைத்து வெளியான பல படங்களில் நடித்தவர்.

தற்போது சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவரது படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில், "நான் சினிமாவுக்கு போக முடிவு செய்த போதுனா எனக் குடும்பத்தில் யாரும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. என் அப்பா வேண்டாம் என்று கூறினார். ‘நீங்கள் அனுப்பவில்லை என்றால், சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிவிடுவேன்’ என்று மிரட்டி தான் சினிமாவுக்கு வந்தேன். அதன் பின் என் அப்பா பயந்து தான் அனுப்பினார். அவரும் கூடவே வந்தார்.

அப்படி தான் கெரியர் தொடங்கியது. ஆசையில் தான் நான் சினிமாவில் வந்தேன்.நான் முதன் முதலில் கமிட் ஆனது, ஆடுகளம் தான். சினிமாவில் சின்ன கேரக்டர் கிடைப்பதே பெரிய விசயம், ஆனால் எனக்கு ஈஸியாக கிடைத்தது.
காரணம், அந்த நேரத்தில் மதுரையை மையமாக வைத்து வந்த படங்களுக்கு நிறைய வாய்ப்பு இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு என்னுடைய மதுரை ஸ்லாங் வாய்ப்பு தந்தது" என்று கூறியுள்ளார்.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan