நான் அட்ஜஸ்ட் பண்ணனும்னு நினைத்தேன் ஆனால்.. அவர் அப்படி இல்ல - நடிகை பேட்டி!
நடிகை ஒருவர் தனது படத்தில் நடந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இனியா
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இனியா. இவர் தமிழில் பாடகசாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், விமலுடன் சேர்ந்து வாகை சூட வா என்ற படத்தில் நடித்தார், அந்த படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு யுத்தம் செய், மாசாணி, சென்னையில் ஒரு நாள், பொட்டு, ரைட்டர், திரைக்கு வராத கதை, நான் கடவுள் இல்லை என பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சீரன் எனும் புதிய படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இதில், அறிமுக இயக்குநர் துரைமுருகன் இயக்கி வரும் சீரன் திரைப்படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா, நரேன், சென்ராயன் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர். அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், நடிகை படத்தில் நடந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், " இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் ஜேம்ஸ் கார்த்திக் சினிமாவுக்கு புதிது என்பதால் அவருடனான நடிக்க வேண்டிய பல காட்சிகளில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என நினைத்தேன்.
ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொரு சீனிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி என்னையே ஆச்சரியப்பட வைத்து விட்டார் ஜேம்ஸ் கார்த்திக். அவர் தான் அதிக டேக் எடுப்பார் என்று நினைத்தேன் ஆனால் நான் தான் அதிக டேக் எடுத்தேன், அவர் டெடிகேட்டட் ஆக நடித்தார்" என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
