அவர் என்னை இரட்டை அர்த்தத்தில் பேசி பின்தொடர்கிறார் - ஹனி ரோஸ் வேதனை
தன்னை ஒருவர் இரட்டை அர்த்தத்தில் பேசி அவமானப்படுத்துவதாக நடிகை ஹனி ரோஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹனி ரோஸ்
தனது 14 வயதில் பாய் ஃபிரெண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார் நடிகை ஹனி ரோஸ்.
பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ள இவர், முதல் கனவே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
ஃபேஸ்புக் பதிவு
இந்நிலையில் ஒரு நபர் தனக்கு இரட்டை அர்த்த வசனத்தில் பேசி தொடர்ந்து தொல்லை அளிப்பதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், ஒரு நபர் இரட்டை அர்த்தத்துடன் வேண்டுமென்றே என்னை பின்தொடர்ந்து அவமானப்படுத்த முயலும் போது, எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? அவர் கூறுவதை ஏற்றுக்கொள்வதுதான் காரணமா என என்னுடைய நட்பு வட்டத்தில் கேட்கிறார்கள்.
அந்த நபர் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்தபோது நான் செல்ல மறுத்து விட்டேன். அதன் பின்னர் நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவர் வருவதும், பெண்மையை அவமதிக்கும் வகையில் என்னைப்பற்றி மீடியாவில் பேசவும் செய்கிறார்.
யார் அந்த நபர்?
பணத்துக்காக ஒருவர் எந்தப் பெண்ணையும் இழிவுபடுத்தலாமா? அவரது செயல்கள் முதன்மையாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக குற்றங்களாகும்.
தனிப்பட்ட முறையில், மனவளர்ச்சி குன்றியவர்களின் இத்தகைய அழுகைகளை நான் அலட்சியத்துடனும் பரிதாபத்துடனும் புறக்கணிக்க முனைகிறேன். இது நான் பதிலளிக்கவில்லை என்று அர்த்தமல்ல" என குறிப்பிட்டுள்ளார்.
ஹனி ரோஸின் பதிவில் அவரை யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில் யார் அந்த நபர் என விவாதம் எழுந்துள்ளது. தொல்லை அளித்தது யார் என்பதை பொதுவெளியில் வெளியிடுங்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.