ஹன்சிகா காதலருக்கு இது 2வது திருமணமாம்..தொடர்ந்து வெளியாகும் பகீர் தகவல்கள்!

Hansika Motwani Tamil Cinema Gossip Today Marriage
By Sumathi 3 வாரங்கள் முன்

ஹன்சிகாவின் வருங்கால கணவருக்கு இது 2வது திருமணம் என்ற தகவல் வெளியாகிய நிலையில் பல செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹன்சிகா

நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

ஹன்சிகா காதலருக்கு இது 2வது திருமணமாம்..தொடர்ந்து வெளியாகும் பகீர் தகவல்கள்! | Actress Hansika Love And Marriage Controversy

சமீபத்தில் ஹன்சிகா நடித்த ஐம்பதாவது திரைப்படமாக ‘மஹா’ வெளியானது. மேலும் அவர் நான்கு தமிழ் திரைப்படங்களிலும் 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணம்? 

இந்நிலையில், காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் புன் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை ஹன்சிகா இன்ஸ்டாவில் பகிர்ந்தார். தொடர்ந்து, ஹன்சிகா, சொஹைல் கதூரியா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது.

ஹன்சிகா காதலருக்கு இது 2வது திருமணமாம்..தொடர்ந்து வெளியாகும் பகீர் தகவல்கள்! | Actress Hansika Love And Marriage Controversy

அது அதிகமாக பகிரப்பட்டது. இதற்கிடையில், அவரது காதலருக்கு இது 2வது திருமணம் என்ற தகவலும் வெளியானது. கடந்த 2016ம் ஆண்டு ரிங்கி என்ற பெண்னை திருமணம் செய்துள்ளார் சொஹைல். அந்த நிகழ்ச்சியில், ஹன்சிகா கலந்துக் கொண்டு நடனம் ஆடியுள்ளார்.

அந்த வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் அவரது முதல் மனைவியுடன் ஹன்சிகா எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வலம் வருகிறது.