ஹன்சிகாவின் காதலர் என்ன செய்கிறார் தெரியுமா.. இணையத்தை கலக்கும் ஹாட் டாப்பிக்!
நடிகை ஹன்சிகா தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
சமீபத்தில் ஹன்சிகா நடித்த ஐம்பதாவது திரைப்படமாக ‘மஹா’ வெளியானது. மேலும் அவர் நான்கு தமிழ் திரைப்படங்களிலும் 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலர் யார்?
இந்நிலையில், காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் புன் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்லார். மேலும், இப்போதும் & எப்போதும் என கேப்ஷனும் எழுதியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது தீயாய் வைரலாகி வருகிறது.
இதற்கு ரசிகள் தங்களது வாழ்த்துகளோடு சேர்த்து வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 20220ஆம் ஆண்டு இருந்து சொஹைலை ஹன்சிகாவுக்கு தெரியுமாம். இவர் ஒரு தொழிலதிபர். இருவரும் பிசினஸ் பார்ட்னர் என்பதை தவிர்த்து நல்ல நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இது தற்போது திருமணம் வரை வந்துள்ளது. இவர்களது திருமணம் ஜெய்ப்பூர், முண்டோடோ கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.