பவதாரிணி இறந்துடுவாங்கனு முன்னாடியே தெரியும் -இளையராஜா மருமகள் பகீர்!
இளையராஜாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் பவதாரிணியின் இறப்பு குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பவதாரணி இறப்பு
இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி(47). சிறந்த பின்னணி பாடகர் தேசிய விருது வென்றவர். புற்றுநோய் பாதிக்கப்பட்டு இலங்கையில் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இளையராஜாவின் நெருங்கிய உறவினரின் மகளான நடிகை விலாசினி, பவதாரிணி இளையராஜாவிற்கு உடலில் நீரிழப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து சொல்லப்பட்டார்.
உடல்நிலை குறித்த தகவல்
அங்கு சில பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் புற்றுநோய் நான்காவது நிலையில் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். சாதாரண பித்தப்பை கட்டியாக உருவாகிய அது நாளடைவில் புற்றுநோய் கட்டியாக மாறியுள்ளது. அது நுரையீரல்வரை பரவியுள்ளது. பவதாரிணிக்கு புற்றுநோய் நான்காவது நிலையில் இருப்பதை அவரிடம் சொல்லக்கூடாது என குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.
இந்த விஷயம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் குடும்பத்தினருக்கே தெரியவந்தது. புற்றுநோய் இருப்பது மட்டுமே பவதாரிணிக்கு தெரியும். மருத்துவர்கள் பவதாரிணி அதிக நாட்கள் இருக்கமாட்டார் எனவும் கூறினார்கள். குறைந்தது இரண்டு வருடமாவது பவதாரிணி இருப்பார் என்று குடும்பத்தினர் நினைத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர் உயிரிழந்தது மொத்த குடும்பத்தையும் உலுக்கியது எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை ஹாசினி இளையராஜாவின் தங்கை மகள் என்பது குறிப்பிடத்தக்கது.