Friday, Jun 6, 2025

பறித்து சென்ற புற்றுநோய்..! இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி காலமானார்..!

Ilayaraaja Yuvan Shankar Raja
By Karthick a year ago
Report

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவதாரிணி

இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான பவதாரணி, தொடர்ந்து எண்ணற்ற ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

ilayaraja-daughter-dies-of-cancer

பாரதி படத்தில் "மயில் போலப் பொண்ணு ஒன்னு" என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருதை வென்றார் பவதாரணி. 47 வயதாகும் இவர், இலங்கையில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்த சூழலில் தான் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் பவதாரணி. பவதாரிணியின் மறைவு தமிழ் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.