பொண்ணுனு கூட பாக்கமாட்டாங்க, நடுவழியில நிப்பாட்டி டிரெஸ் மாத்த சொல்லுவாங்க - நடிகை ஓபன் டாக்!

Gayathrie Tamil Cinema Tamil Actors
By Vinothini Jul 27, 2023 07:46 AM GMT
Report

நடிகை தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த கஷ்டமான தருணங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிரபல நடிகை

நடிகை காயத்ரி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இதனை தொடர்ந்து, ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, விக்ரம், மாமனிதன் என பல படங்களில் நடிகர் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார்.

actress-gayathrie-speaks-about-movie-experience

இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பல தகவல்களை கூறியுள்ளார். இவர் பல படங்களில் ஹோம்லியாக நடித்திருப்பார், ஆனால் அவர் நிஜத்தில் ரொம்பவே மாடர்ன் என்று கூடியுள்ளார்.

கஷ்டங்கள்

இந்நிலையில், இவர் பல லோ பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார், அதில் இவர் எதிர்கொண்ட கஷ்டமான சூழல்களை பற்றி கூறியுள்ளார். அதில் அவர், "ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் மட்டும் தான் பெண் பாத்ரூம் கூட இருக்காது என்றும் அதை கூட யோசிக்காமல் தயாரிப்பு தரப்பு அப்படியே கண்டுக்காமல் விட்டு விடுவது தர்ம சங்கடத்தை உண்டாக்கி விடும்.

actress-gayathrie-speaks-about-movie-experience

நானும் அதுபோன்ற கஷ்டமான சூழல்களில் சிக்கித் தவித்திருக்கேன். ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு லொகேஷனுக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, நடுவிலேயே ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, இங்கே ஒரு மாண்டேஜ் எடுத்துக்கலாம், நீங்க கொஞ்சம் கார்லயே டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுங்கன்னு கூலா சொல்லிட்டாங்க, எனக்கு செம கஷ்டமா போயிடுச்சு, அட்லீஸ்ட் டிரெஸ் மாத்த நடிகைகளுக்கு ஒரு ரூமாவது அரேஞ்ச் பண்ணனும்" என்று கூறியுள்ளார்.