தலைக்கேறிய போதை.. ரூமுக்கு வந்து அப்படி கேட்டான் - நடிகை ஓபன் டாக்!

Vinothini
in பிரபலங்கள்Report this article
நடிகை காயத்ரி தனது வாழ்க்கையில் நடந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
சீரியல் நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமானவர். இந்த சீரியலில் குணசேகரனின் தங்கையான ஆதிரையை திருமணம் செய்துள்ள கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், இவர் சமீபத்தில் அயலி என்ற வெப் தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் பற்றி பேசியுள்ளார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், அவர், "கல்லூரி படித்துக்கொண்டிருந்த போத, நிகழ்ச்சி ஒன்றுக்காக வெளியூர் சென்றிருந்தேன் அப்போது, குடி போதையில் ஒருவர் என்னை பின் தொடர்ந்து ஓட்டல் ரூம் வரைக்கும் வந்து, ரேட் என்ன சொல்லு என்றார். நான் கல்லூரி மாணவி என்று சொல்லியும், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் சத்தம் போட்டு கத்தினேன். பின் பக்கத்து அறையில் இருந்தவர்கள் அந்த குடிகாரரை மிரட்டி அனுப்பினார்கள். இந்த மோசமான அனுபவத்தை நான் என்றைக்கும் மறக்கவே மாட்டேன்" என்று கூறியுள்ளார்.