அதிக வயது வித்தியாசம்; உடலுறவு தான் வாழ்க்கையா? பரபரப்பை கிளப்பிய சீரியல் நடிகை!

Indian Actress Marriage Viral Photos
By Sumathi Nov 02, 2024 06:00 PM GMT
Report

சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் திருமணம் குறித்து பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

திவ்யா ஸ்ரீதர் 

மலையாள நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளனர். பத்தரைமாற்று என்ற சீரியல் மூலமாக ஒன்றாக நடித்ததன் மூலம் காதலித்து வந்தனர்.

venu gopal - dhivya

பின், உறவினர்கள் முன்னிலையில் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வயது வித்தியாசம் காரணமாக இணையத்தில் வெளியாகி விமர்சங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இது குறித்து திவ்யா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், திருமணம் செய்வது அவ்வளவு பெரிய தவறான செயலா? நெகட்டிவாக பேசுகிறவர்கள் அவர்களுடைய வாழ்க்கை அப்படி ஆனதால் அவர்கள் இதுபோன்று பேசுகிறார்கள்.

மும்பையில் ஜெயம் ரவிக்கு 2வது திருமணம்? தீராய் பரவும் தகவல்!

மும்பையில் ஜெயம் ரவிக்கு 2வது திருமணம்? தீராய் பரவும் தகவல்!

2வது திருமணம்  

நாங்கள் திருமணம் செய்து கொண்டால் நெகட்டிவ் கமெண்ட்கள் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு மோசமாக கமெண்ட்கள் வரும் என்று எதிர்பார்க்கல. நாங்கள் திருமணம் செய்தது செக்ஸுக்காக அல்ல. என் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.

அதிக வயது வித்தியாசம்; உடலுறவு தான் வாழ்க்கையா? பரபரப்பை கிளப்பிய சீரியல் நடிகை! | Actress Divya Sridhar Divya About 2Nd Marriage

அவர்களுக்கு ஒரு தந்தை வேண்டும். என் கணவர் என்று கூறுவதற்கு ஒரு அடையாளம் வேண்டும். வாழ்க்கை என்பது செக்ஸ் மட்டும்தான் என எங்காவது எழுதி வைத்திருக்கிறார்களா? செக்ஸ் இல்லாமல் வாழவே முடியாதா? உண்மையில் வேணுகோபாலுக்கு 49 வயதும் எனக்கு 40 வயதும் ஆகிறது.

இனி எங்கள் வயதைப் பற்றி தவறாக பேசுபவர்கள் பேசி கொள்ளட்டும் எனப் பேசியுள்ளார். திவ்யா ஸ்ரீதருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.