தொடர்ந்து வலியுறுத்தும் தாய் - 2வது திருமணம் செய்யும் விஜே பிரியங்கா?
விஜே பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜே பிரியங்கா
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பிரியங்கா. இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து பிரபலமாக மாறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இரண்டாவது திருமணம்?
தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், பிரியங்காவிடம் அவரது தாய் கடந்த சில காலமாகவே இன்னொரு திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்திவந்ததாகவும்,
அதற்கு ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளாத பிரியங்கா இப்போது மனம் மாறி திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.