மத சடங்கு நிகழ்ச்சி.. தவளை விஷத்தை குடித்த பிரபல நடிகை.. துடிதுடித்து உயிரிழப்பு!
தவளையின் விஷம் கொண்ட பானத்தைப் பிரபல நடிகை குடித்து உயிரிழந்துள்ளார்.
பிரபல நடிகை..
வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ மாகாணத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ். இவருக்கு மதத்தின் மீதும் மத சடங்குகளின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டவர். அந்த வகையில் அவர் அண்மையில் கலந்து கொண்ட ஆண்மீக நிகழ்ச்சி
ஒன்றில் உடலில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் சடங்கு என்று ஒரு சிலர் வினோத சடங்கை நடத்தியுள்ளனர். ராட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய தவளையின் விஷத்தை எடுத்துக் கொள்வதே இந்த சடங்காகும். அந்த தவளை விஷம் நமது உடலில் சென்று,
உடலில் இருக்கும் கெட்ட விஷயங்களை எல்லாம் அழித்துவிடும் என்பதாலேயே இதுபோல செய்கிறார்கள். ஆனால், அறிவியல் ரீதியாக இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இருந்த போதிலும் நடிகை மார்செலா இந்த சடங்கைச் செய்துள்ளார்.
தவளை விஷம்
அடுத்த சில மணி நேரத்திலேயே அவருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்குப் போய் இருக்கிறது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நடிகை ஹீலர் அங்கு நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். அதில் தான் அமேசான் காடுகளில் வாழும் விஷம் கொண்ட ராட்சத இலை தவளையின் விஷத்தைக் கொண்ட பானத்தை அவர் குடித்து இருக்கிறார்.
திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உடன் இருந்தவர்கள் மருத்துவமனை செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், தனது உடலை இப்போது சுத்தமாவதாகவும் அதன் ஒரு பகுதியே இது எனச் சொல்லி அவர் மருத்துவ உதவியை நாட மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
நேரம் செல்ல செல்ல நிலைமை மோசமாகியிருக்கிறது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.