தோழியுடன் முன்னாள் காதலரை எரித்து கொலை - பிரபல நடிகையின் தங்கை செய்த கொடூரம்
முன்னாள் காதலரை எரித்து கொன்ற பிரபல நடிகையின் தங்கை கைது செய்யப்பட்டுள்ளார்.
நர்கிஸ் ஃபக்ரி
அமெரிக்காவில் பிறந்த நடிகையான நர்கிஸ் ஃபக்ரி(Nargis Fakhri) பாலிவுடட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவரது தங்கையான அலியா ஃபக்ரி (43) இரட்டை கொலை வழக்கில் அமெரிக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு தீ வைப்பு
அலியா ஃபக்ரி(aliya fakhri), மற்றும் எட்வர்ட் ஜேக்கப்ஸ்(edward jacobs) (35) ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். சில காரணங்களால் இவர்களது காதல் முறிவடைந்துள்ளது. அலியா ஃபக்ரி மீண்டும் தன்னுடைய முன்னாள் காதலருடன் சேர முயன்றுள்ளார்.
ஆனால் எட்வர்ட் ஜேக்கப்ஸ் அவரை ஏற்கவில்லை. மேலும் எட்வர்ட் ஜேக்கப்ஸ், அனஸ்டாசியா எட்டியென்(anastasia etienne) (33) என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அலியா ஃபக்ரி, நியூயார்க்கின் குயின்ஸ் மாவட்டத்தில் ஜேக்கப்ஸ் வீட்டுக்கு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி அதிகாலையில் தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
விசாரணை
அதில், வீட்டில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த எட்வார்டு ஜேக்கப்ஸ் மற்றும் அவரது தோழி அனஸ்டாசியா எட்டியென் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் அலியா ஃபக்ரி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. அலியா ஃபக்ரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுமென தகவல் வெளியாகி உள்ளது.