வாய்ப்புக்காக 14 வயதிலேயே ஊசி போட்டுக்கிட்டேன் - பிரபல நடிகை ஷாக் தகவல்
நடிகை பாக்கிய லட்சுமி தனது திரை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை பாக்கிய லட்சுமி
80களின் பிரபலமான நடிகை பாக்கிய ஸ்ரீ. தமிழில் தேவியின் திருவிளையாடல் திரைப்படத்தில் அறிமுகமாகினார். அதுமட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின் சினிமாவுக்கு வராமல் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், 14 வயதில் சினிமாவுக்கு வந்ததால், உடலை பெரிதாக்குவதற்காக ஒரு ஊசிப் போட்டேன். அப்போது நடிகைகள் கொஞ்சம் குண்டாக இருப்பார்கள். அப்படி இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும்.
சினிமா வாய்ப்பு
அதற்காக அந்த ஊசியை போட்டேன். கொஞ்சம் உடல் எடை போட்டது, அப்போது சில படங்கள் நடித்தேன், அதற்குள் குடும்பத்திற்குள் வந்துவிட்டேன். ஊசி போட்டதற்கான பக்கவிளைவு, கர்ப்ப காலத்தில் தெரிந்தது. ஹிரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக குண்டானேன்.
மோகன் லால் கூடவெல்லாம் நடித்தேன். தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது திருமணத்திற்கான வாய்ப்பு வந்தது. குடும்பத்திற்குள் வந்துவிட்டேன். பின்னர் வருந்தினேன், ஏன் இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்தோம் என்று. நடிகைக்கு பப்ளிசிட்டி ரொம்ப முக்கியம். திருப்பி நடிக்கலாமே என்று பலரும் கூறினார்கள். அதனால், மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
ரஜினி சார் இன்றும் சூப்பர் ஸ்டார். அவருடன் நான் நடித்திருக்கேன். அவர் எவ்வளவு பெரிய நடிகர். அப்பேர் பட்ட புகழ் கொண்டவர்களிடம் நடித்திருக்கிறேன் என்று நினைப்பதே பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்திய அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி IBC Tamil
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை IBC Tamil