பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை? படவாய்ப்பிற்காக இப்படியா - வாயடைத்த ரசிகர்கள்!
பட வாய்ப்புக்காக பிரபல நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அதுல்யா ரவி
தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. அதற்குப்பின்பு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து, அதுல்யா ரவி, சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். சமீபத்தில் பாட வாய்ப்பு அதிகம் இல்லாததால் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அடஹ்ன்மூலம் ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டிருந்தார்.
பிளாஸ்டிக் சர்ஜரி
இந்நிலையில், அதுல்யா ரவி எப்படியாவது பட வாய்ப்பை பெற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தனது மூக்கை மாற்றியுள்ளார். ஹோம்லி லுக் முகம் என்பதால், தான் படவாய்ப்பு தரவில்லை என நினைத்து இவ்வாறு செய்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பல வதந்திகளுக்குப் பிறகு, தனது பெற்றோர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். செல்ஃப் கேர் மற்றும் தீவிர உடற்பயிற்சி காரணமாக தனது முகம் வெகுவாக மாறியதாக அதுல்யா கூறியுள்ளார்.