ஆடிஷன்லயே ஆடையை இழுக்கச் சொன்னார்.. மோசமாக பேசிய பிரபல இயக்குனர் - சீரியல் நடிகை வெளிப்படை!
பிரபல சீரியல் நடிகை ஆடிஷன் அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சீரியல் நடிகை
பிரபல சீரியல் நடிகையான அர்ச்சனா மாரியப்பன் தமிழில் பல சீரியல்களில் வில்லி வேடத்தில் நடித்துள்ளார். இவர் வாணி ராணி, அழகு, வள்ளி, அழகி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், போகி, முத்தின கத்திரிக்காய், நாடோடிகள், வெள்ளக்கார துரை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
பேட்டி
இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில், "அவர் பெரிய டைரக்டர், அவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அவரிடம் ஆடிஷனுக்குப் போனேன். படத்தில் நான் செவிலியராக நடிக்கிறேன் என்றார்கள். நர்ஸ் வேடத்தில் இருப்பீர்கள் என சொன்னதும் நான் சரி என்ற மனநிலமைக்கு வந்துவிட்டேன். ஒரு வாரம் ஷூட்டிங் இருக்கு என்றார். அப்போது அனைத்து உதவி இயக்குநர்களும் வெளியே சென்றுவிட்டனர்.
அன்று நான் சல்வார் அணிந்திருந்தேன். அப்போது டைரக்டர் என்னிடம், 'உன் பேன்ட்டை முழங்கால் வரை இழு' என்றார். ஏன் சார் என நான் கேட்டேன். செவிலியர் வேடத்தில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார். சரி என்று சொல்லி, கால்சட்டையை முழங்கால் வரை தூக்கினேன்.
அவ்வளவு தூக்கியதும் கொஞ்சம் மேலே தூக்கச் சொன்னார். அப்போது தான் அவருக்கு வேறு நோக்கங்கள் இருப்பதை உணர்ந்தேன். அவர் பெரிய இயக்குநர் என்பதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. நானும் நாளை வந்து காஸ்ட்யூம் போட்டுக் கொள்கிறேன் என்று அந்த அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்தேன்" என்று கூறியுள்ளார்.