என் லைஃப்ல வந்து நேசிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி - உருக்கமான வீடியோவை வெளியிட்ட அபர்ணா தாஸ்!
நடிகை அபர்ணா தாஸ் உருக்கமான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகை அபர்ணா தாஸ்
பிரகாசம் என்னும் மலையாள படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். அதன்பின், பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வினுக்கு ஜோடியாக இவர் நடித்த டாடா திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது மலையாளம் மற்றும் தமிழில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பீஸ்ட், அம்மணி போன்ற படங்களில் நடித்திருக்கும் மூத்த நடிகை சுபலக்ஷ்மி படப்பிடிப்பின் போது ஆடிய நடன வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
உருக்கமான வீடியோ
மேலும், இந்த வீடியோவை இப்போது போஸ்ட் செய்ய வேண்டும் என தோன்றியது. உங்களைக் குறித்து செய்தி வரும் வரையில் உங்கள் மீது இவ்வளவு அன்பு எனக்கு இருக்கிறது என்பது எனக்கே தெரியவில்லை. தனது கடைசி நாள் வரை வேலை செய்ய வேண்டும் என நினைத்த ஒரு வலிமையான பெண் இவர்.
டைசியாக நாங்கள் பேசியபோது சீக்கிரமாக உடலை சரி செய்து கொண்டு வேலைக்கு திரும்புவதாக அவர் கூறியிருந்தார். அவரது 87 வயது வரை அவர் வேலை செய்துவந்தார். கொஞ்சமும் சோர்வடையவில்லை. இது அவருக்கான ஓய்வெடுக்கும் நேரமாக அமைந்திருக்கிறது. என் வாழ்க்கைக்கு வந்து என்னை நேசிக்க வைத்ததற்கு மிகவும் நன்றி.
அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன். மீண்டும் அவரது குரலை கேட்க காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த மற்றும் முன்னணி நடிகையான சுபலக்ஷ்மி வயது மூப்பு காரணமாக காலமானது குறிப்பிடத்தக்கது.