‘உனக்கு பின்னால் நான் இருப்பேன்...’ - பிக்பாஸ் புகழ் கவினுக்கு எமோஷனல் கடிதம் எழுதிய நடிகை..!

Bigg Boss Kavin Aparna Das
By Nandhini Feb 10, 2023 12:11 PM GMT
Report

 ‘உனக்கு பின்னால் நான் இருப்பேன்...’ என்று பிக்பாஸ் புகழ் கவினுக்கு நடிகை அபர்ணா தாஸ் உணர்ச்சிப்பூர்வமாக கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

லாஸ்லியாவுடன் காதல் முறிவு...?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலடைந்தார் நடிகர் கவின். இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கைப் பெண் லாஸ்லியா மீது காதல் வயப்பட்டு பல பிரச்சினைகளை சந்தித்தார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் பிரிந்துவிட்டதாக பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாயின.

kavin-aparna-das-emotional-letter

எமோஷனல் கடிதம் எழுதிய நடிகை

இதனையடுத்து, பிக்பாஸ் கவின் நடிப்பில் வெளியான படம் ‘லிப்ட்’. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு அடுத்ததாக தற்போது நடித்துள்ள படம் ‘டாடா’. இப்படத்தில், கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த நடிகை அபர்ணா தாஸ் உணர்ச்சிபூர்வமான கடிதம் ஒன்றை நடிகர் கவினுக்காக எழுதியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அபர்ணா தாஸ் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நீங்கள் படத்திற்காக எவ்வளவு வேலை செய்திருக்கிறீர்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் எல்லா துறைகளிலும் நீங்கள் இருந்தீர்கள். பெரும்பாலான நேர்காணல்களில் நான் உங்களைக் சீக்கிரம் கோபமடைந்துவிடுவார் என கூறினேன். ஆனால் இங்கே நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். சரியான விஷயங்களுக்காக மட்டுமே நீங்கள் போராடியிருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் அனைத்திற்கும் ஒரு நல்ல தோழியாக நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.