திருமணம், பிரபாஸ்? முதல்முறை மெளனம் உடைத்த அனுஷ்கா!

Anushka Shetty
By Sumathi Sep 07, 2023 10:01 AM GMT
Report

பிரபாஸ் குறித்து அனுஷ்கா சில தகவல்கள் பகிர்ந்துள்ளார்.

நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்து கொண்டிருந்த சமயத்தில் இஞ்சு இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார். அதன்பின் பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.

திருமணம், பிரபாஸ்? முதல்முறை மெளனம் உடைத்த அனுஷ்கா! | Actress Anushka Talked About Marriage

அப்படி இருந்தும் கூட அனுஷ்காவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. மேலும் 41 வயதாகியும் அனுஷ்கா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

திருமணம்? 

தற்போது தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கான புரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது பேசியதில், நடிகர் பிரபாஸுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?

திருமணம், பிரபாஸ்? முதல்முறை மெளனம் உடைத்த அனுஷ்கா! | Actress Anushka Talked About Marriage

என்று கேட்கப்பட்டதற்கு அனுஷ்கா இதற்கான முடிவு என் கையில் இல்லை. எங்களது ஜோடி ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகிறது என்பது தெரியும். இதற்கு காரணம் அந்த கதை அம்சம் மற்றும் படத்தொகுப்புகள் போன்றவை தான். எங்கள் இருவருக்கும் கதைகள் உருவாக்கினால் கண்டிப்பாக மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமணம் குறித்த கேள்விக்கு, உண்மையாகவே இதற்கு என்ன பதில் சொல்வது என்பது எனக்கு தெரியவில்லை. இயல்பாகவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும். அதற்கான நேரம் இருக்கிறது அப்போது அது இயல்பாகவே நடக்கும் எனக் கூறியுள்ளார்.