43 வயதாகியும் திருமணமாகல.. காதலனை பற்றி முதல்முறை மனம் திறந்த அனுஷ்கா!
முதல் காதல் குறித்து நடிகை அனுஷ்கா மனம் திறந்துள்ளார்.
நடிகை அனுஷ்கா
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா.ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை கூட்டினார். ஆனால் அதற்கு பிறகு அவரால் எடையை குறைக்க முடியவில்லை.
இதன் காரணமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சில வருடங்கள் வெளியே தலை காட்டாமல் இருந்தவர், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அது நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் காதல்
அடுத்ததாக காதி என்ற படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் வெளியாகிறது. இதற்கிடையில் பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக், பாகுபலி ஆகிய படங்களில் நடித்தபோது பிரபாஸுடன் ஏற்பட்ட பழக்கம் அனுஷ்காவுக்கு காதலாக மாறிவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் அனுஷ்கா அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், "நான் ஆறாவது படித்துக்கொண்டிருந்தபோது எனது வகுப்பில் ஒரு பையன் படித்தான். அவன் என்னிடம் வந்து, 'நான் உன்னை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன்' என்று கூறினான்.
அப்போது ஐ லவ் யூ என்றால் என்னவென்றுகூட எனக்கு தெரியாது. ஆனாலும் நான் அந்த ப்ரோபோசலுக்கு ஓகே என்று சொன்னேன். காதல் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அந்த சம்பவம் எனது வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே இன்றும் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.