என் சடலத்தை உடல் எடை காரணமா கஷ்டப்பட்டு இறக்குனாங்களாம்... மன வேதனையில் பிரபல நடிகை!
தன்னை பற்றிய வதந்திகளின் காரணமாக அதிகமாக மன வேதனை அடைந்து அழுத்தாக நடிகை அஞ்சு தெரிவித்துள்ளார்.
பேபி அஞ்சு
உதிரிப்பூக்கள், மீண்டும் கோகிலா, கேளடி கண்மணி போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி அஞ்சு. வசந்த் இயக்கிய கேளடி கண்மணி படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து, குணச்சித்திர நடிகையாகவும் வலம் வந்தார்.
தொடர்ந்து, பல பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். 1995ல் பிரபல நடிகர் டைகர் பிரபாகரனை காதல் திருமணம் செய்தார். ஒரே வருடத்தில் அவரை விவாகரத்தும் செய்தார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் சில உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
திருமணம்
அதில், ”எனக்கு திருமணம் நடந்ததே ஒரு விபத்தாகத் தான் கருதுகிறேன். என்னைத் திருமணம் செய்து கொண்டவருக்கு என்னைவிட வயது ரொம்பவே அதிகம். என் அப்பாவின் வற்புறுத்தலால் நான் அவரைக் கல்யாணம் செய்தேன். திருமணத்திற்குப் பின்னர் தான் எனக்கு அவரின் உண்மையான முகம் தெரியவந்தது.
அவருக்கு என்னைவிட அதிக வயதில் இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நான் விவாகரத்து செய்தேன். ஆனால் அதற்குள் என் மகன் பிறந்துவிட்டான். இதனால் என் மகனுடன் நான் சென்னை வளசரவாக்கத்தில் செட்டில் ஆகிவிட்டேன். அப்போது திடீரென என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வந்தன.
தற்கொலை வதந்தி
நான் தற்கொலை செய்து கொண்டதாகவும். என் உடல் எடை காரணமாக என் சடலத்தை கஷ்டப்பட்டு இறக்கியதாவும் செய்திகள் எழுதப்பட்டிருந்தன. அதைப்பற்றி அறிந்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். நடிகையாக இருந்து ஃபீல்ட் அவுட் ஆனால் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். என்னைப் பற்றி ஒரு கிசுகிசு வந்தது.
இயக்குநர் வசந்த் என்னை துரத்தி துரத்தி காதலிப்பதாக செய்தி வந்தது. அதைப் பார்த்து நான் அழுது தீர்த்தேன். அப்போது என்னை மகேந்திரன் சாரிடம் அழைத்துச் சென்றனர். மகேந்திரன் சார் என்னிடம்.. அடச்சீ எதுக்கு அழகுற. இதெல்லாம் உனக்கு பப்ளிசிட்டி என்று கடந்து போ என்றார். அது எனக்கு ஒரு ஐ ஓப்பனர் என்பேன்.
பாடி ஷேமிங்
அப்புறம் என்னை இண்டஸ்ட்ரியில் நிறைய பாடி ஷேமிங் செய்தனர். என் உடல் வாகே அப்படித்தான். அதற்கு நான் என்ன செய்வேன். ஹீரோயினாக நடிக்கும்போது பாடி ஷேமிங் செய்தால் பரவாயில்லை. நான் காமெடி கேரக்டர்களில் நடித்த போதெல்லாம் பாடி ஷேமிங் செய்தனர்.
அதனால் எனக்கு சில நேரங்களில் மனது வலிக்கும். ஆனால் என்னை ஏளனம் செய்பவர்களிடம் புரிய வைக்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.