கல்லூரி கட்டணம் செலுத்தாததால் வெளிய நிறுத்தி வைத்து கொடுமை - மனமுடைந்த மாணவி தற்கொலை
கல்லூரி கட்டணம் செலுத்தாததால் 3 நாட்கள் வெளிய நிறுத்தி வைத்து கொடுமை படுத்தியதால் மனமுடைந்து கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
நாகை நாகூர் வண்ணாங்குளம் மேல் கரை அமிர்தா நகரில் வசிப்பவர் சுப்ரமணியன. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
கடைசி மகள் சுபாஷினி (வயது 19), இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரி கட்டணமான ரூ 65 ஆயிரத்தில் 15 ஆயிரம் கட்டி விட்ட நிலையில், மீதி 50 ஆயிரம் பணம் கட்ட தாமதம் ஆனதால் கல்லூரி நிர்வாகம் கடந்த 3 நாட்களாக மாணவி சுபாஷினியை வகுப்பிற்கு வெளியில் நிறுத்தி வைத்து வாயில் வந்தபடி திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த மாணவி சுபாஷினி இன்று 12..30 மணி அளவில் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகூர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெளியே நிறுத்தி வைத்து அவமானப்படுத்திய கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கொந்தளித்து வருகின்ற்னர்.