பீரியட்ஸ் நேரத்தில்தான் அதை கரெக்டா பண்ணுவாங்க; கடுப்பாகும் - அஞ்சலி ஓபன்டாக்
பீரியட்ஸ் குறித்து நடிகை அஞ்சலி மனம் திறந்துள்ளார்.
நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.
2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கும் காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அவர் எனக்கு நல்ல நன்பர்தான் என அஞ்சலி விளக்கமளித்திருந்தார்.
பீரியட்ஸ் வேதனை
தற்போது வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள இவர், பொதுவாகவே ஒவ்வொரு பெண்களுக்கும் பீரியட்ஸ் நேரத்தில் பல வகையான வேதனைகள் ஏற்படும். எனக்கு எப்போதெல்லாம் பீரியட்ஸ் நேரம் வருகிறதோ அப்போதுதான் மழையில் நனைந்தபடி நடிக்கக்கூடிய காட்சிகள் வரும்.
ஈரமான உடைகளை அணிந்து கொண்டு நடிக்க கூடிய காட்சிகள், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காட்சிகள் நடிக்க வேண்டியது வரும். கடினமான நடன அசைவுகள் இருக்கக்கூடிய காட்சிகளை எல்லாம் அப்போதுதான் வைப்பார்கள்.இது எனக்கு ஒரு விதமான கடுப்பாக இருக்கும்.
அதனால் என்னுடைய பீரியட்ஸ் நேரங்களில் இயக்குனரிடம் இப்படியான காட்சிகள் எல்லாம் குறிப்பிட்ட நாட்களுக்கு எடுக்க வேண்டாம் என்று தன்மையாக கூறி விடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.