தகாத இடத்தில் தொட்ட நடிகர் - துறையை விட்டே விலகுவதாக அறிவித்த பிரபல நடிகை!
துறையை விட்டு விலகுவதாக பிரபல நடிகை அறிவித்துள்ளார்.
நடிகை அஞ்சலி ராகவ்
மியூசிக் வீடியோக்களில் நடித்துப் புகழ் பெற்றவர் அஞ்சலி ராகவ். இவரும் பவன் சிங்கும் இணைந்து நடித்த 'சையா சேவா கரே' என்ற பாடலை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் லக்னோவில் நடந்தது.
அப்போது அஞ்சலியின் இடுப்பைப் பவன் சிங்க தவறான முறையில் தொட்டிருக்கிறார். இதனை டுமையாகக் கண்டித்துள்ள அஞ்சலி, இனி போஜ்புரி துறையிலேயே பணியாற்றப் போவதில்லை என கூறியுள்ளார்.
இதுகுறித்து அஞ்சலி வெளியிட்டுள்ள வீடியோவில், "கடந்த இரண்டு நாட்களாக நான் மிகவும் கவலையாக இருக்கிறேன். இந்தச் சம்பவம் நடந்த போது நான் ஏன் எதுவும் சொல்லவில்லை. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, ஏன் அவரை அறையவில்லை என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள்.
சிலர் என்னைக் குறை கூறுகிறார்கள். நான் சிரித்ததாகவும் ரசித்ததாகவும் கூட சில நெட்டிசன்கள் சொல்கிறார்கள். என் அனுமதியின்றி பொது இடத்தில் யாராவது என்னைத் தொட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேனா அல்லது அதை ரசிப்பேனா? என் டீமிடம் எதாவது அங்கே இருக்கிறதா என்று கேட்டேன்.
பகீர் குற்றச்சாட்டு
அவர்கள் எதுவும் இல்லை என்று சொன்னார்கள். அப்போதுதான் நான் மிகவும் வருத்தப்பட்டேன், கோபப்பட்டேன், அழுதுவிட்டேன். ஆனால் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அப்போதே பவனை சந்திக்க முயன்றேன்.
ஆனால் அதற்குள் பவன் சிங் கிளம்பிவிட்டார்.. பிறகு நானும் இதை விட்டுவிட்டேன். அடுத்த நாள் வீடு திரும்பியபோதுதான் இந்தச் சர்ச்சை பெரிய அளவில் மாறியதை உணர்ந்தேன். பவன் சிங்கின் பிஆர் டீம் மிகவும் வலிமையானது என்பதால், இந்த விஷயத்தில் பவன் பற்றி எதுவும் கருத்து சொல்ல வேண்டாம் என்று எனது டீம் சொன்னார்கள்.
நானும் சரி இந்தப் பிரச்சனை ஓரிரு நாட்களில் போய்விடும் என்று நம்பினேன்.. ஆனால் அது மேலும் மேலும் பெரிதாகிக் கொண்டே போகிறது. எந்த ஒரு பெண்ணையும் அனுமதியின்றித் தொடுவதை நான் ஆதரிக்கவில்லை.
அதுவே தப்பு தான். அதிலும் இதுபோல பொது இடத்தில் வைத்துத் தொடுவது மிகவும் தவறு. இதே விஷயம் எனது சொந்த மாநிலமான ஹரியானாவில் நடந்திருந்தால், நான் பதிலளிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அங்கிருக்கும் மக்களே பதிலளித்திருப்பார்கள்.
ஆனால் நான் லக்னோவில் இருந்தேன், அது என் இடம் இல்லை. நான் இனிமேல் போஜ்புரி துறையில் பணியாற்ற மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.