நடிகை அஞ்சலிக்கு திருமணம் - அட.. மாப்பிள்ளை விவாகரத்தான அவரா?
நடிகை அஞ்சலி திருமணம் குறித்த தகவல் பரவி வருகிறது.
நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். 2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கு காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது.
திருமணம்?
தற்போது வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அஞ்சலி ஆந்திராவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார் என்ற தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.
அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே விவாகரத்தானவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.