பிச்சைக்காரர்களுடன் தியேட்டர் வாசலில் படுக்கவைத்த இயக்குநர் - அஞ்சலி வேதனை
அங்காடித் தெரு குறித்து அஞ்சலி ஃபீல் செய்த தகவல் வைரலாகி வருகிறது.
நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். 2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கு காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது.
அங்காடி தெரு
தற்போது வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அங்காடி தெரு படத்தின் போது அவர் அனுபவித்த கஷ்டம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
அந்தப் படத்தின் இயக்குனர் வசந்த் பாலன் படப்பிடிப்பில் பிச்சைக்காரர்களுடன் சாலையில் படுக்க வைத்து அவர் எடுத்த காட்சிகள் பிடிக்காமல் அவர்மீது கோபம் கொண்டாராம்.
அதன்பின் படம் வெளியான பிறகு அந்த சீன்களை பார்த்து அவர் மனம் மாறிவிட்டாராம். தற்போது அஞ்சலி ராமின் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார்.