பெற்றோரே நம்ப மாட்டாங்க.. முதல் முதலாக திருமணம் குறித்து மனம் திறந்த அஞ்சலி!

Anjali Tamil Cinema
By Sumathi May 29, 2024 09:00 AM GMT
Report

 திருமண வதந்தி குறித்து நடிகை அஞ்சலி பேசியுள்ளார்.

நடிகை அஞ்சலி 

நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

actress anjali

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். 2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கும் காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், அவர் எனக்கு நல்ல நன்பர்தான் என அஞ்சலி விளக்கமளித்திருந்தார். தற்போது வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அஞ்சலி ’கேங்ஸ் ஆப் கோதாவரி' படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ’கேம் சேஞ்சர்’ ராம் இயக்கத்தில் ’ஏழு கடல் ஏழுமலை’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

பிச்சைக்காரர்களுடன் படுக்க வைத்த பிரபல இயக்குநர் - கொந்தளித்த நடிகை அஞ்சலி!

பிச்சைக்காரர்களுடன் படுக்க வைத்த பிரபல இயக்குநர் - கொந்தளித்த நடிகை அஞ்சலி!

திருமண வதந்தி

இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் திருமணம் குறித்த கேள்விக்கு, ‘சமூக வலைதளத்தில் எனக்கு கிட்டத்தட்ட நான்கு திருமணங்கள் செய்து வைத்து விட்டார்கள், இது போன்ற திருமண வதந்திகள் வரும்போது வீட்டில் உள்ள அனைவரும் கவலைப்பட்டனர்.

பெற்றோரே நம்ப மாட்டாங்க.. முதல் முதலாக திருமணம் குறித்து மனம் திறந்த அஞ்சலி! | Actress Anjali About Her Marriage

ஆனால் சில நாட்கள் மட்டுமே அது பரபரப்பாக இருக்கும், இப்போது எல்லாம் எனது திருமண செய்தி வந்தால் யாரும் கண்டுகொள்வதில்லை, என் பெற்றோரே நான் காதலிக்கிறேன் என ஒரு பையனை கூட்டி கொண்டு சென்றால் நம்ப மாட்டார்கள்.

இப்போதைக்கு தனது திருமணம் இல்லை என்றும் 50 படங்களை கடந்துவிட்டாலும் திரையுலகில் பிஸியாக இருக்கிறேன். இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் அதற்கு பிறகு தான் திருமணம் எனத் தெரிவித்துள்ளார்.