கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலன் - கதறிய நடிகை அனிகா
உடல் காயங்களுடன் நடிகை அனிகா விக்ரமன் வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனிகா விக்ரமன்
பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகை அனிகா விக்ரமன். விஷமக்காரன், எங்க பாட்டன் சொத்து உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
அதில், "நான் அனூப் பிள்ளை என்ற நபரை காதலித்தேன். ஆனால் அவர் என்னை பல வருடங்களாக மனதளவிலும், உடலளவிலும் சித்ரவதை செய்து வந்தார். முதலில் சென்னையில் வைத்து என்னை தாக்கினார். ஆனால் அதன்பின்னர் காலில் விழுந்து அழுததால் அதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக என்னை துன்புறுத்தியதால் பெங்களூரு போலீசில் புகார் அளித்தேன்.
தாக்குதல்
ஆனால் அவர் காவல்துறையினரிடம் பணம் கொடுத்து என்னை சிக்கவைத்தார். மேலும் போலீசார் தன்னுடன் இருப்பதாக நினைத்து தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். இதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அனூப்பால் நான் ஏமாற்றப்பட்டு வருவதை அறிந்தேன். அதனால் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் அவர் என்னை விட்டு விலக தயாராக இல்லை நான் படப்பிடிற்கே சென்றுவிடக்கூடாது என்று விரும்பிய அவர், அதற்காக என் மொபைலை உடைத்தார்.
அதேநேரம் என் வாட்ஸ்அப்பை எனக்கு தெரியாமல் லேப்டாப்பில் இணைத்து பார்த்துக் கொண்டிருந்தார். மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில், உச்சகட்டமாக என்னையும், எனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். தற்போது அனூப் நியூயார்க்கில் தலைமறைவாக உள்ளார்.
அவரது சித்திரவதையால் ஏற்பட்ட காயங்கள் இப்போது கொஞ்சம் சரியாகிவிட்டது. நானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். அடுத்த வாரம் முதல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.