பக்கத்துல அப்பா இருக்காரு.. டி-ஷர்ட் உள்ள கை வந்துச்சு - போட்டுடைத்த ஆண்ட்ரியா!
சிறுமியாக இருக்கும்போது தனக்கு நேர்ந்த ஒரு மோசமான நிகழ்வு குறித்து நடிகை ஆண்ட்ரியா பேசியுள்ளார்,
நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் அசத்தி வருபவர் ஆண்ட்ரியா. இவர் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, அனல் மேலே பனித்துளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா, சிறுமியாக இருக்கும்போது தனக்கு நேர்ந்த ஒரு மோசமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
வேதனை
அவர் கூறியதாவது "நான் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது அப்பாவும் அருகில் அமர்ந்திருந்தார். எனக்கு அப்போது 11 வயதுதான் இருக்கும். நான் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்திருந்தேன்.
திடீரென ஒரு கை எனது டி-ஷர்ட் உள்ளே வருவது போன்று உணர்ந்தேன். நான் உடனே கொஞ்சம் முன்னால் வந்து அமர்ந்தேன் அவ்வளவுதான். இதை அப்பாவிடமும், அம்மாவிடமும் சொல்லவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை" என்று வேதனை தெரிவித்துள்ளார்.