மணக்கோலத்தில் அம்ரிதா அய்யர் - என்ன கல்யாணம் ஆகிருச்சா? புலம்பும் ரசிகர்கள்!

Amritha Aiyer Only Kollywood Gossip Today Viral Photos
By Sumathi Sep 05, 2022 04:37 AM GMT
Report

பிகில் பட நடிகை மணக்கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

அம்ரிதா அய்யர்

பெங்களூருவை சேர்ந்தவரான அம்ரிதா அய்யர், 2012 ல் பத்மவியூகம் என்ற மலையாள படத்தின் மூலம் நடிக்க வந்தவர். தமிழில் தெனாலிராமன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து லிங்கா, போக்கிரி ராஜா, தெறி, படைவீரன், ,காளி போன்ற படங்களில் நடித்தார். இருந்தும் அம்ரிதா அய்யர் பெரிய அளவில் பேசப்படவில்லை.

மணக்கோலத்தில் அம்ரிதா அய்யர் - என்ன கல்யாணம் ஆகிருச்சா? புலம்பும் ரசிகர்கள்! | Actress Amritha Aiyer Potos Got Viral

2019 ல் விஜய் நடித்த பிகில் படத்தில் அம்ரிதா அய்யர், தென்றல் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பெண்கள் கால்பந்தாட்ட அணியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் அம்ரிதாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.

திருமணமா?

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அம்ரிதா, இன்ஸ்டாகிராமில் அழகான, கவர்ச்சியான போட்டோஷூட் படங்களை வெளியிட்டு பலரையும் கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நடிகை அம்ரிதா அய்யர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகின்றன.

மணக்கோலத்தில் அம்ரிதா அய்யர் - என்ன கல்யாணம் ஆகிருச்சா? புலம்பும் ரசிகர்கள்! | Actress Amritha Aiyer Potos Got Viral

பட்டுப் புடவை அணிந்து கொண்டு மாலையும் கழுத்துமாக மாப்பிள்ளை அருகே இவர் அமர்ந்திருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அம்ரிதா அய்யருக்கு திருமணம் ஆகிடுச்சா, என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஷூட்டிங் ஸ்டில்ஸ்

அதனைத் தொடர்ந்து, அம்ரிதா அய்யர் "No no it's not my marriage pictures!" என தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இது படத்திற்கான ஷூட்டிங் ஸ்டில்ஸ் என விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது இவர், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் காபி வித் காதல், தெலுங்கில் உருவாகி வரும் சூப்பர் ஹீரோ படமான ஹனுமான், அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்த டிஜே அருணாச்சலம் நடிக்கும் தமிழ் படம் மற்றும் கன்னடத்தில் உருவாகி வரும் கிராமயணா என 4 படங்களில் நடித்து வருகிறார்.