நானே என்னை மூழ்கடித்து கொள்கிறேன் - தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகை!!
போஜ்புரி மொழியில் நடித்து வந்த பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகை தற்கொலை
போஜ்புரி மொழி படங்களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை அம்ரிதா பாண்டே. வெப் சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சி தொடர்களிலும் நடித்துள்ள அவருக்கு அம்மொழியில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிஸியாக படங்களில் நடித்து வந்த போதே, கடந்த 2022-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துக் கொண்டு மும்பையில் செட்லானார் அம்ரிதா பாண்டே.

மும்பையில் இருந்து இவர் தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்காக பீகார் வந்துள்ளார். திருமணம் முடிந்த நிலையில், அங்கேயே சில நாட்கள் அம்ரிதா தங்கியிருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அம்ரிதாவின் சகோதரர் அவரது அறையில் சென்று பார்த்த போது, அம்ரிதா தற்கொலை செய்து கொண்ட விஷயம் வெளியே தெரிந்துள்ளது.

பிரபல நடிகையாக இருந்த போதிலும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. இறப்பதற்கு முன்பு அம்ரிதா தனது வாட்ஸப்பில், ‘இரண்டு படகுகளில் சவாரி செய்வது கடினமாக உள்ளது. அதனால், இரண்டையும் மூழ்கடித்து எனது பயணத்தை எளிதாக்கிக் கொண்டேன்"என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan