டிஆர்பிக்காக இப்படி அசிங்கமாவா? ‘நீயா நானா’ மீது நடிகை அம்மு காட்டம்!

Viral Video Star Vijay
By Sumathi Sep 01, 2025 04:48 PM GMT
Report

தெருநாய்கள் குறித்த விவாதத்தில் நடிகை அம்மு விளக்கம் அளித்துள்ளார்.

தெருநாய்கள் 

தெருநாய்கள் ஒரு சமூகப் பிரச்சனையா அல்லது அவற்றை ஆதரிக்க வேண்டுமா என்பது குறித்து 'நீயா நானா' நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது.

actress ammu

இந்த விவாதத்தில் பங்கேற்ற நடிகை அம்மு, நாய்களுக்கு ஆதரவாக பேசினார். இந்த விவாதத்தின் வீடியோ பரவியதும், பலரும் நடிகை அம்முவுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் விவாதம் தொடர்பாக நடிகை அம்மு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நீயா நானாவில் நான் கலந்துகொண்டதை வைத்து நிறைய பேர் ட்ரால் செய்றீங்க... Abuse- ஆ நிறைய வார்த்தைகளை பயன்படுத்திறீங்க.

இனி முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன்; ஏன்? விஷால்

இனி முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன்; ஏன்? விஷால்

அம்மு விளக்கம்

அதுக்கெல்லாம் பயந்து நான் இந்த வீடியோவை போடவில்லை. உங்கள் வெறுப்பை சம்பாதிக்க இந்நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை. அவதூறு வார்த்தைகளுக்கு பயந்து நான் இந்த வீடியோவை வெளியிடவில்லை. தனியார் சேனல் 8 மணி நேர நிகழ்ச்சி பதிவை எடிட் செய்து 45 நிமிடம் மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளனர்.

எதிர் தரப்பினருக்கு மட்டுமே வாய்ப்பு அதிகம் வழங்கப்பட்டது. எங்கெல்லாம் நாய்களால் பிரச்சனை நடந்ததோ அவர்களையெல்லாம் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுத்த தனியார் டிவி நிர்வாகம், எதற்காக நாய்கள் வேண்டும் என நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை.

எங்களை பேசவே விடவில்லை.டிஆர்பிக்காக ஏன் இவ்வளவு அசிங்கமான விளையாட்டை விளையாண்டு இருக்கீங்க... இதனால் பாதிக்கப்படுவது நாய்கள் தான்.” என விளக்கமளித்துள்ளார்.